நெல்லை அருகே காரில் கருகிய நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 4 பேர் சடலங்களாக மீட்பு

நெல்லை அருகே காரில் கருகிய நிலையில் சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் 4 பேர் சடலங்களாக மீட்பு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே எரிந்த நிலையில் நின்ற காரிலிருந்து சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்களை போலீஸார் மீட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் முகமது ரபி, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் என்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. கடன் தொல்லை காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று தர்காவில் வழிபாடு நடத்திவிட்டு தானம் வழங்கிய பின் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தடய அறிவியல் துறையினர் காரிலிருந்த எலும்புகளை டிஎன்ஏ பரிசோதனைக்காக சேகரித்துள்ளனர். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் நான்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *