நெதன்யாகு கொல்லப்பட்டாரா என்ற வதந்திக்கு இஸ்ரேல் முற்றுப்புள்ளி ஈரான் கடும் எச்சரிக்கை
March 15, 2026

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதலில் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவிய தகவலை இஸ்ரேல் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அவர் நலமுடன் இருப்பதாகவும் அண்மையில் வெளியான வீடியோக்கள் உண்மையானவை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நெதன்யாகு காயமடைந்தது போன்ற புகைப்படங்கள் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அதேவேளையில் நெதன்யாகுவை நிச்சயம் வீழ்த்துவோம் என்று ஈரான் மீண்டும் சூளுரைத்துள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலிய பிரதமரை குறிவைத்துத் தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் மூலம் வீடியோக்கள் உருவாக்கப்பட்டதாக எழுந்த விமர்சனங்களையும் இஸ்ரேல் தரப்பு நிராகரித்துள்ளது.