நிலநடுக்கத்தில் அசாம் உலுக்கியபோது, NICU-வில் பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்களின் வீரம் வைரல்

நிலநடுக்கத்தில் அசாம் உலுக்கியபோது, NICU-வில் பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்களின் வீரம் வைரல்

ஞாயிற்றுக்கிழமை மதியம், அசாமின் நாகான் பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த பயங்கரமான சூழலில், ஒரு மருத்துவமனையின் NICU வார்டில் பணியில் இருந்த செவிலியர்கள் அசாத்திய தைரியத்துடன் செயல்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக இன்குபேட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உறுதியாகப் பிடித்து, பச்சிளம் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு காத்தனர். அவர்களின் இந்த துணிச்சலான செயலுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாமின் உதல்குரி மாவட்டத்தில் 5 கி.மீ. ஆழத்தில் இருந்ததால், அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. அத்துடன், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதுவரை எந்த பெரிய சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *