நிச்சயதார்த்தத்தை நிறுத்தியதால் இளம்பெண்ணின் உடலில் எச்ஐவி ஊசியை செலுத்தி கொடூர பழிவாங்கல்
March 14, 2026

ஐதராபாத்தில் திருமணத்தை மறுத்த இளம்பெண்ணுக்கு அவரது முன்னாள் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நபர் எச்.ஐ.வி ஊசியைச் செலுத்திய அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்ததையடுத்து இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட மனோகர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதை அறிந்த பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோகர், கடந்த மார்ச் 11 அன்று இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்து மறைத்து வைத்திருந்த ஊசியைச் செலுத்தியுள்ளார். தற்போது தலைமறைவாக இருந்த மனோகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.