நாளை வெளியாகிறது தவெக வேட்பாளர் பட்டியல் மற்றும் அதிரடி அறிவிப்புகள்
March 28, 2026

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை சென்னையில் அறிமுகம் செய்து வைக்கிறார். இன்று நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சி தேர்தல் ஆணையத்தின் அனுமதி தாமதமானதால் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாளை காலை 11 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் மாநில அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் முறைப்படி அறிவிப்பார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் இந்த அடுத்தகட்ட நகர்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.