நாளை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: ஏடிஎம் சேவை பாதிக்குமா?

நாளை நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தம்: ஏடிஎம் சேவை பாதிக்குமா?

புதிய தொழிலாளர் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், வங்கித் தனியார்மயமாக்கலை எதிர்த்தும், வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிப்ரவரி 12-ஆம் தேதி (நாளை) நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்திற்குப் பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. INTUC, CITU மற்றும் AITUC போன்ற முன்னணி சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால், காசோலை பரிமாற்றம் மற்றும் நேரடி வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வங்கி வேலைநிறுத்தத்துடன் அதே நாளில் ‘பாரத் பந்த்’ அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும், ஒரு நாள் போராட்டம் என்பதால் ஏடிஎம் சேவைகளில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். முன்னெச்சரிக்கையாக, அவசர பணப் பரிவர்த்தனைகளை இன்றே முடித்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *