நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி போராட்டம்
March 11, 2026

மத்திய கிழக்கு போர் காரணமாக எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. வீட்டு உபயோகத்தை உறுதி செய்ய வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் உணவகங்களை நம்பியிருக்கும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த இக்கட்டான நிலையைக் கையாளத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் கலந்துகொண்டார். நிலைமை மோசமடைந்து வருவதாகவும், எரிவாயு விநியோகம் குறித்து மத்திய அரசு உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறி வருவதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் குற்றம் சாட்டினார்.