நாங்கள் போட்ட ரோடு அவர்கள் ஒட்டும் ஸ்டிக்கர் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடும் தாக்கு

நாங்கள் போட்ட ரோடு அவர்கள் ஒட்டும் ஸ்டிக்கர் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கடும் தாக்கு

கோவையில் நடைபெற்ற விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி திமுக அரசு அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதாகச் சாடினார். அவிநாசி சாலை மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்று குறிப்பிட்ட அவர் லாலி ரோடு மேம்பாலம் போன்ற திட்டங்களை இந்த அரசு முடக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

மின் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் வழங்கி ஒரு மாயையை அரசு உருவாக்குவதாக அவர் விமர்சித்தார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் விரைவில் மக்கள் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவார்கள் என ஆவேசமாகப் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *