நாங்கள் கத்தார் அல்ல என இஸ்ரேலை நரகத்திற்கு அனுப்புவதாக பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை

நாங்கள் கத்தார் அல்ல என இஸ்ரேலை நரகத்திற்கு அனுப்புவதாக பாகிஸ்தான் கடும் எச்சரிக்கை

தெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே இஸ்ரேல் நடத்திய குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாங்கள் கத்தார் நாட்டைப் போல அமைதியாக இருக்க மாட்டோம் என்றும், உலகில் எங்காவது ஒரு பாகிஸ்தான் தூதருக்கு பாதிப்பு ஏற்பட்டால் இஸ்ரேல் நரகத்தை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே பாகிஸ்தான் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. தெஹ்ரானில் உள்ள தூதரக குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் குண்டுகளை வீசியதால் அதிருப்தி அடைந்துள்ள பாகிஸ்தான், தனது அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *