நடுநிசியில் திடீர் பசி எடுக்கிறதா இது ஆபத்தான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் எச்சரிக்கை

நள்ளிரவில் அடிக்கடி பசி எடுப்பது வெறும் பழக்கமல்ல மாறாக இது ஹார்மோன் சமநிலையின்மை அல்லது உடல் கடிகார சுழற்சியில் ஏற்படும் பாதிப்பின் அறிகுறியாகும். கிரெலின் மற்றும் லெப்டின் போன்ற ஹார்மோன்களின் மாற்றம் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தை அதிகரித்து உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிக்கிறது. குறிப்பாக உடல் பருமன் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் இந்த நள்ளிரவு பசிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இரவில் தாமதமாக சாப்பிடுவதால் உடலில் கலோரிகள் எரிக்கப்படும் திறன் குறைந்து கொழுப்பு சேரும் அபாயம் அதிகரிக்கிறது. நள்ளிரவு பசியுடன் அதிகப்படியான வியர்வை அல்லது காலையில் தலைவலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. உடல் எடையைக் குறைக்க நவீன மருந்துகள் இருந்தாலும் முறையான வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் ஆரம்பக்கட்ட மருத்துவ ஆலோசனையே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.