தோல்விக்குப் பிறகு இந்திய ஜெர்சி அணிந்து நடனமாடிய பாகிஸ்தான் ரசிகர்

தோல்விக்குப் பிறகு இந்திய ஜெர்சி அணிந்து நடனமாடிய பாகிஸ்தான் ரசிகர்

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியில், ஒரு பாகிஸ்தான் ரசிகர் இந்திய ஜெர்சியை அணிந்து மைதானத்தில் நடனமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, இந்திய ரசிகர்களுடன் சேர்ந்து அவர் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது புன்னகை மற்றும் உற்சாகமான நடனம் மைதானத்தில் இருந்த இந்திய ஆதரவாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.

இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியதிலிருந்தே, ஆதிக்கம் செலுத்தி வந்தது. அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், பாகிஸ்தான் நிர்ணயித்த 128 ரன்கள் இலக்கை எளிதாக வென்றது. இறுதியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். போட்டியின் முடிவில், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *