தோனி – தீபக் சஹார் மீது நகைச்சுவையான கிண்டல்!
March 24, 2025

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) இடையிலான போட்டியில், CSK முன்னாள் வீரர் தீபக் சஹார் தனது அதிரடி ஆட்டத்தால் கவனம் ஈர்த்தார். CSK அணிக்கெதிராக விளையாடிய அவர், கோபத்துடன் போர்க்குணம் நிறைந்த பாணியில் விளையாடினார். அவரின் ஒவ்வொரு ஷாட்டும், “என்னையவா ரீட்டைன் பண்ணல?” என்ற கேள்வியுடன் அடிக்கப்படுவது போல தோன்றியது.
இருப்பினும், போட்டி முடிவில் CSK வெற்றி பெற்ற நிலையில், தோனி தனது வழக்கமான அமைதியுடன் MI வீரர்களிடம் சென்று கை கொடுத்தார். பின்னர் தனது பழைய சகத்தினரான தீபக் சஹாரை சந்தித்து, நண்பர்கள் மத்தியில் இருக்கும் அழகிய நகைச்சுவையுடன், “என்னுடைய வளர்ப்புதான்” என்கிற பாணியில் அவரது பின்புறம் பேட்டால் அடித்து கிண்டல் செய்தார். தோனியின் இந்த நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.