தேர்தல் நேரத்தில் மது விற்பனைக்கு அதிரடி கட்டுப்பாடு ஒருவருக்கு இவ்வளவு தான் லிமிட்

தேர்தல் நேரத்தில் மது விற்பனைக்கு அதிரடி கட்டுப்பாடு ஒருவருக்கு இவ்வளவு தான் லிமிட்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒரு நபர் அதிகபட்சமாக 4.5 லிட்டர் மதுபானம் அல்லது 7.8 லிட்டர் வரை மட்டுமே பீர் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஒருவருக்கு 9 லிட்டருக்கு மேல் மது விற்பனை செய்யக்கூடாது என அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விற்பனை வரம்புகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட அமைப்பின் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மேலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தலின் போது முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *