தேர்தல் நெருங்கும் வேளையில் டெல்லி பயணத்தை தவிர்க்க சிபிஐ அமைப்பிடம் அதிரடி கோரிக்கை விடுத்த விஜய்

கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக அடிக்கடி டெல்லி செல்வது சிரமமாக இருப்பதால், அடுத்தகட்ட விசாரணையை தமிழ்நாட்டிலேயே நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிப் பணிகள் மற்றும் பிரச்சாரச் சுமைகளை கருத்தில் கொண்டு அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. இதுவரை மூன்று முறை டெல்லியில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள விஜய், சுமார் 7 மணி நேர விசாரணைக்குப் பிறகு இந்த மனுவை அளித்தார். இதற்கிடையில், இதே விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் மார்ச் 17-ஆம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.