தேர்தல் நடத்தை விதிகளால் 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்வோருக்கு கிடுக்கிப்பிடி
March 16, 2026

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் இதுவரை 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறுகையில் வரும் மார்ச் 30 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என்றார். கண்காணிப்புப் பணிகளுக்காக 2106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் இன்றி பிடிபடும் பணம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.