தேர்தல் தேதிக்கு முன்பே அசாம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டும் காங்கிரஸ்

தேர்தல் தேதிக்கு முன்பே அசாம் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு அதிரடி காட்டும் காங்கிரஸ்

அசாம் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் கட்சி தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட இந்த பட்டியலில் 23 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே 42 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் 65 தொகுதிகளுக்கான பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் மாநிலத் தலைவர் கௌரவ் கோகாய் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு 15 இடங்களை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள இடங்களில் காங்கிரஸ் களம் காண்கிறது. 2016-ல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க, வேட்புமனு தாக்கலுக்கு முன்பே வேட்பாளர்களை அறிவித்து காங்கிரஸ் தனது தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *