தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நிமிடம் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படம் அகற்றம்

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படங்கள் மற்றும் அரசுத் திட்ட விளம்பரங்கள் அகற்றப்பட்டன. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அரசு இயந்திரம் தற்போது தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளின்படி அமைச்சர்கள் அரசு வாகனங்களையோ அல்லது அதிகாரப்பூர்வ பயணங்களையோ தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவோ அல்லது நிதி ஒதுக்கீடு செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய அரசுச் சுவர் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *