துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் விமான சேவைகள் அதிரடியாக நிறுத்தம்
March 16, 2026
.jpeg.webp?w=1146&resize=1146,675&ssl=1)
துபாய் சர்வதேச விமான நிலைய எரிபொருள் தொட்டி மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலால் பாதுகாப்பு கருதி அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த பாதிப்பால் கொச்சியிலிருந்து துபாய் சென்ற விமானம் நடுவானிலிருந்து மீண்டும் கேரளாவுக்கே திரும்பியது. ஏர் இந்தியா சில வழித்தடங்களில் சேவையைத் தொடர்ந்தாலும், சர்வதேச வான்வெளியில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.