திருச்சியில் திமுகவின் ஊழல் பணமெல்லாம் ஒரே குடும்பத்திற்கு செல்வதாக பிரதமர் மோடி கடும் தாக்குதல்

திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் நிலவும் ஊழல் மற்றும் குடும்ப அரசியலை கடுமையாக விமர்சித்தார். ஆறுகள் அனைத்தும் இறுதியில் கடலில் சங்கமிப்பதைப் போல, தமிழகத்தின் ஊழல் பணம் அனைத்தும் இறுதியில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சென்றடைவதாக அவர் குற்றம் சாட்டினார். திமுக அரசு ஒரு குடும்பத்தின் ஏடிஎம்-ஆகச் செயல்படுவதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த பயணத்தின் போது, ரூ.5,655 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். இதில் ராமேஸ்வரம் – மங்களூர் விரைவு ரயில் உள்ளிட்ட ஐந்து முக்கிய ரயில் சேவைகளும் அடங்கும். தமிழக மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்தை விரும்புவதாகவும், என்.டி.ஏ கூட்டணியால் மட்டுமே அந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.