திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பிடிவாதம் காட்டும் தேமுதிகவால் பரபரப்பு

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் பிடிவாதம் காட்டும் தேமுதிகவால் பரபரப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையிலும், குறிப்பிட்ட தொகுதிகளை பெறுவதில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக திமுக வசம் உள்ள ரிஷிவந்தியம், எழும்பூர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளை பிரேமலதா விஜயகாந்த் குறிவைப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாச்சலம் தொகுதி உறுதியான நிலையில், மற்ற சிட்டிங் தொகுதிகளை விட்டுக்கொடுக்க திமுக தயக்கம் காட்டுகிறது. இதற்கு மாற்றாக உளுந்தூர்பேட்டை போன்ற தொகுதிகளை திமுக முன்மொழிந்தும் தேமுதிக ஏற்கவில்லை. தேர்தல் நெருங்குவதால் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர திமுக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *