திமுக கூட்டணியில் திடீர் விரிசல் தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் வேல்முருகன் அதிரடி முடிவு

திமுக கூட்டணியில் திடீர் விரிசல் தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன் வேல்முருகன் அதிரடி முடிவு

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அரசியல் குழு பரிந்துரைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதா அல்லது மாற்று கூட்டணியில் இணைவதா என்பது குறித்து இறுதி முடிவெடுக்க வேல்முருகனுக்கு கட்சி நிர்வாகிகள் அதிகாரம் அளித்துள்ளனர். திமுக தங்களது கோரிக்கைகளை ஏற்கத் தவறினால் கூட்டணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த திடீர் திருப்பம் தமிழக அரசியலில் விவாதப் பொருளாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *