தாய்லாந்து புக்கெட் விமான நிலையத்தில் பெரும் விபத்து நூலிழையில் உயிர் தப்பிய 133 ஏர் இந்தியா பயணிகள்
March 13, 2026

ஐதராபாத்திலிருந்து புக்கெட் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது முன்பக்க சக்கரம் கழன்று ஓடுதளத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தின் முன்பகுதி மற்றும் ஓடுதளம் பலத்த சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக 133 பயணிகளும் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
தற்போது புக்கெட் விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து தாய்லாந்து விமானப் போக்குவரத்து துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், மாலைக்குள் விமான சேவை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.