தவறான முறையில் தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தைப் பாதிக்கும் நிபுணர்களின் எச்சரிக்கை

தவறான முறையில் தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தைப் பாதிக்கும் நிபுணர்களின் எச்சரிக்கை

தண்ணீர் குடிப்பதில் நாம் செய்யும் தவறுகள் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதால் அது நேரடியாக வயிற்றுக்குள் சென்று சிறுநீரகத்தின் வடிகட்டும் முறையைப் பாதிப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது காலப்போக்கில் சிறுநீரகம் மற்றும் மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே எப்போதும் அமர்ந்து நிதானமாகத் தண்ணீர் குடிப்பதே உடலுக்கு ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உடல் எடைக்கு ஏற்பவே தண்ணீர் குடிக்க வேண்டும். ஒவ்வொரு 20 கிலோ எடைக்கும் 1 லிட்டர் தண்ணீர் அவசியம் என்பது பொதுவான விதி. உணவுக்கு முன்னும் பின்னும் அதிக தண்ணீர் குடிப்பது செரிமானத்தைத் தடுக்கும். அதேபோல் குளிரூட்டப்பட்ட ஐஸ் தண்ணீர் இரத்த நாளங்களைச் சுருக்கும் என்பதால், சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரைக் குடிப்பதே உடலுக்குச் சிறந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *