தலைமை இழந்த பின்பும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை திணறடிக்கும் ஈரானின் மொசைக் பாதுகாப்பு வியூகம்

தலைமை இழந்த பின்பும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை திணறடிக்கும் ஈரானின் மொசைக் பாதுகாப்பு வியூகம்

ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் கொல்லப்பட்ட பிறகும், அந்நாட்டின் ராணுவ பலம் குறையாமல் இருப்பது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2003 ஈராக் போரின் அனுபவத்தைக் கொண்டு, மத்திய தலைமை இல்லாமலும் போரிடும் வகையில் ஈரான் தனது ராணுவத்தை மாற்றியமைத்துள்ளது. தற்போது தலைமை இல்லாத நிலையிலும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

முன்னாள் தளபதி ஜாஃபரியின் ‘மொசைக் பாதுகாப்பு’ கொள்கையே இதற்கு முக்கிய காரணமாகும். இதன் கீழ் ராணுவம் 31 தனிப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் தன்னிச்சையாகச் செயல்படும் திறன் பெற்றுள்ளன. இந்த வியூகத்தால் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியும் அமெரிக்கத் தளங்களைத் தாக்கியும் ஈரான் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *