தல தோனி சாதனை: ஐபிஎல் கீப்பிங் சாதனையில் முதலிடம்

தல தோனி சாதனை: ஐபிஎல் கீப்பிங் சாதனையில் முதலிடம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் சிறந்த விக்கெட் கீப்பர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி முதலிடத்தை பிடித்துள்ளார். தோனி 264 போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு 190 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 42 ‘ஸ்டம்பிங்’ மற்றும் 148 கேட்ச் ஆகியவை அடங்கும்.

தோனி தனது வயதை பொருட்படுத்தாமல் இன்னமும் அதே நம்பிக்கையுடன் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை பிரமிக்க வைக்கிறார். இவரது கவனக்குறைவில்லாத கீப்பிங் திறனே அவரை இந்த சாதனைக்கு இட்டுச் சென்றது. தோனியின் இந்த சாதனைக்கு அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் உற்சாகமாக வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். ‘தல’ தோனியின் இந்த சாதனைக்கு நிச்சயமாக விசில் போடணும்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *