தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கையில் 5 நாட்கள் இடைவெளி ஏன்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வாக்கு எண்ணிக்கையில் 5 நாட்கள் இடைவெளி ஏன்

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி கேரளா, அசாம், புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதியும், தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் வெளியாக 5 நாட்கள் இடைவெளி இருப்பது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. பெரிய மாநிலங்களான தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகள் இருப்பதால், தேர்தல் பணிகளை முறைப்படுத்தவும், ஏதேனும் ஒரு சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கு அவகாசம் தேவை என்பதாலுமே இந்த கால இடைவெளி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *