தமிழக தேர்தல் களத்தில் அதிரடி திருப்பம் தரும் பியூஷ் கோயலின் சென்னை வருகை

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்து வேட்பாளர் பட்டியலை நோக்கி நகர்கிறது. ஆனால், என்டிஏ கூட்டணியில் தவெக உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்தச் சூழலில், அதிமுகவுடன் இறுதி கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி 29 தொகுதிகளை உறுதி செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார்.
மார்ச் 30-ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளதால், குறைந்த கால அவகாசத்திற்குள் தொகுதிகளைப் பிரிப்பதில் என்டிஏ முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸை விட ஒரு இடமாவது கூடுதலாகப் பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேயான இந்தச் சந்திப்பு, தமிழக என்டிஏ கூட்டணியின் வெற்றி வாய்ப்புகளையும் தொகுதிப் பட்டியலையும் தீர்மானிக்கும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.