தனிமையைப் போக்க ஒரு மணிநேரக் கட்டிப்பிடித்தலுக்கு ஏழாயிரம் ரூபாய் வசூலிக்கும் வினோதப் பெண்
February 24, 2026

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரைச் சேர்ந்த அனிகா ரோஸ் என்பவர் தொழில்முறை அணைப்பாளர் எனும் வினோதமான பணியின் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் மன அழுத்தம் மற்றும் தனிமையால் வாடும் மக்களுக்கு ஆறுதல் அளிப்பதையே இவர் தனது முழுநேரத் தொழிலாக மாற்றிக்கொண்டுள்ளார்.
அனிகாவிடம் ஒரு மணிநேரம் கட்டிப்பிடித்து ஆறுதல் பெற வாடிக்கையாளர்கள் இந்திய மதிப்பில் சுமார் ₹7,400 கட்டணமாகச் செலுத்துகின்றனர். இந்த அணைப்பு சிகிச்சை வெறும் வணிகமாக மட்டுமின்றி மன ரீதியான பாதுகாப்பையும் மகிழ்ச்சியையும் தருவதாக வாடிக்கையாளர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.