தந்தையை மூட்டைய கட்டி கொரியர் அனுப்ப முயன்ற இளம்பெண்
March 18, 2026

பெங்களூருவில் ரீல்ஸ் மோகத்தால் தனது தந்தையையே சாக்கு மூட்டையில் கட்டி கொரியர் அனுப்ப முயன்ற இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பேருந்து கட்டண உயர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகக் கூறி, மங்களூருக்கு பார்சல் அனுப்ப அந்த இளம்பெண் முயன்றார். அப்போது மூட்டைக்குள் இருந்த முதியவரை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து விசாரணை நடத்தினர். வெறும் விளம்பரத்திற்காக தந்தையின் உயிருடன் விளையாடிய அந்த பெண்ணை போலீசார் கடுமையாக எச்சரித்தனர். இனி இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடமாட்டோம் என அவர்களிடம் போலீசார் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டனர்.