டோக்கியோ உலக சாம்பியன்ஷிப்: தங்கத்தை வெல்லப்போவது நீரஜா, அர்ஷதா?

டோக்கியோ உலக சாம்பியன்ஷிப்: தங்கத்தை வெல்லப்போவது நீரஜா, அர்ஷதா?

டோக்கியோவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் 2025ன் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீமை எதிர்கொள்ள உள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு இவர்கள் இருவரும் ஒரு பெரிய தொடரில் சந்திப்பது இதுவே முதல் முறை. இதனால் ஒட்டுமொத்த உலகமும் இந்த போட்டியின் மீது கவனம் செலுத்தி வருகிறது.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீமை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும், நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் நீரஜ் 9-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார். இந்த போட்டியிலும் தனது வெற்றியைத் தொடர நீரஜ் இலக்கு வைத்துள்ளார், அதே நேரத்தில் அர்ஷத் அவருக்கு கடும் சவாலை அளிக்கத் தயாராக உள்ளார். போட்டி இந்திய நேரப்படி மாலை 3:53 மணிக்கு தொடங்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *