டொனால்ட் ட்ரம்ப் கொடுத்த நம்பிக்கையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு

டொனால்ட் ட்ரம்ப் கொடுத்த நம்பிக்கையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு

ஈரான் உடனான போர் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் 119 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 85 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையும் 89 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது.

இந்த விலை மாற்றத்தால் அமெரிக்கப் பங்குச் சந்தை மீண்டும் எழுச்சி கண்டுள்ளது. ஜி7 நாடுகள் அவசரகால எண்ணெய் இருப்பை வெளியிட முன்வந்ததால் சந்தையில் நிலவிய பதற்றம் தணிந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் குறித்த அச்சம் நீங்கி உலகப் பொருளாதாரத்தில் தற்போது சுமுகமான சூழல் நிலவுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *