டெல்லியின் திக்குமுக்காகிப் பின் அபார வெற்றி

210 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி கடினமான போராட்டத்திற்குப் பின்னர் வெற்றியை தட்டிச் சென்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் மார்ஷ் (72 ரன்கள்) மற்றும் பூரன் (75 ரன்கள்) ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வலுவான ஸ்கோரை அளித்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சில் ஸ்டார்க் சிறப்பாகப் பந்து வீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்வை ஏற்படுத்தினார்.
பெரிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் வெற்றி தொலைந்து போகுமென்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால் இறுதிகட்டத்தில் அஷுதோஸ் சர்மா மற்றும் நிகம் அபாரமாக ஆடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவரும் அதிரடியான ஷாட்டுகள் விளாசி, கடைசி நேரத்தில் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த வெற்றியால் டெல்லி அணி தங்களின் வலிமையை மீண்டும் நிரூபித்துள்ளது.