டெல்லி சென்ற விஜய் மற்றும் மும்பையில் திரிஷா என தமிழக அரசியலில் அதிர வைக்கும் கூட்டணி மாற்றங்கள்

டெல்லி சென்ற விஜய் மற்றும் மும்பையில் திரிஷா என தமிழக அரசியலில் அதிர வைக்கும் கூட்டணி மாற்றங்கள்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் நடிகர் விஜய்யின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்காக அவர் டெல்லி சென்றிருந்தாலும் அங்கு பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு மற்றும் முக்கிய பதவிகள் தொடர்பாக இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதற்கிடையில் நடிகை திரிஷா ரகசியமாக மும்பை சென்றுள்ளது இந்த விவகாரத்தில் கூடுதல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் டெல்லி பயணத்திற்கு முன்னதாகவே மும்பை சென்ற அவர் அங்குள்ள முக்கிய புள்ளிகளை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய் மற்றும் திரிஷா ஆகிய இருவரின் இந்த வெளிமாநில பயணங்கள் முடிந்து சென்னை திரும்பிய பின்னரே தமிழக அரசியலின் அடுத்தகட்ட கூட்டணி குறித்த இறுதி முடிவு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *