டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் இந்தியாவின் அபார திறமையை பாராட்டிய உலக நாடுகள்
February 23, 2026

புது தில்லியில் நடைபெற்ற ‘ஏஐ இம்பாக்ட்’ உச்சிமாநாட்டில் இந்தியாவின் தொழில்நுட்ப வலிமை மற்றும் இளைஞர்களின் திறமையை உலக நாடுகள் வெகுவாகப் பாராட்டியுள்ளன. இந்திய இளைஞர்களின் தொழில்நுட்பச் சிந்தனை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பெரும் நன்மைகளை விளைவிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பதிவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘புது தில்லி பிரகடனம்’ செயற்கை நுண்ணறிவு துறையில் சர்வதேச ஒத்துழைப்பிற்கான முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. ஐநா பொதுச்செயலாளர் மற்றும் பிரான்ஸ், பிரேசில் அதிபர்கள் உட்பட 89 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. அனைவரின் நலனையும் நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு, ஏஐ துறையில் இந்தியாவை உலகளாவிய முன்னணி நாடாக நிலைநிறுத்தியுள்ளது.