டிரம்பின் போர்நிறுத்த அறிவிப்பு வெறும் பொய் என ஹார்முஸ் நீரிணையில் ஈரான் ராணுவம் கடும் எச்சரிக்கை
March 27, 2026

ஈரானின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 6 வரை தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், இந்தத் தகவலை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. டிரம்பின் வார்த்தைகளை நம்பி வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் அல்லது வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணைக்குள் நுழைய வேண்டாம் என ஈரான் ராணுவம் தற்போது பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க-இஸ்ரேல் படைகளின் தாக்குதலுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், ஐஆர்ஜிசி கடற்படைத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், போர் சூழல் மேலும் சிக்கலாகியுள்ளது.