டாலருக்கு டாட்டா காட்டும் பிரிக்ஸ் நாடுகள் தங்கம் வாங்குவதில் தீவிரம் காட்டுவது ஏன்

அமெரிக்க டாலரைச் சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகள் தற்போது தங்க இருப்புக்களை பெருமளவில் அதிகரித்து வருகின்றன. உலகளாவிய தங்க இருப்பில் சுமார் 20 சதவீதத்தை இந்த நாடுகள் தற்போது தங்கள் வசம் வைத்துள்ளன. உக்ரைன் போருக்குப் பின் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் எழுந்த அச்சமே, டாலருக்கு மாற்றாக தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக இந்த நாடுகள் தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த அதிரடி மாற்றம் அமெரிக்க பொருளாதார மேலாதிக்கத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வது மற்றும் தங்கத்தை குவித்து வைப்பது போன்ற பிரிக்ஸ் நாடுகளின் உத்திகள் சர்வதேச நிதி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. டாலரின் ஆதிக்கம் இன்னும் நீடித்தாலும், பிரிக்ஸ் நாடுகளின் இந்த புதிய பொருளாதார முன்னெடுப்புகள் எதிர்காலத்தில் ஒரு புதிய உலக நிதி ஒழுங்குமுறைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.