டாக்டர்கள் சொன்னது வாயு, AI சொன்னது அப்பெண்டிக்ஸ்! சில நிமிட உரையாடலில் உயிர் பிழைத்த நோயாளி

கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட ஒருவருக்கு மருத்துவர்கள் சாதாரண வாயுத் தொந்தரவு என்று கூறி திருப்பி அனுப்பினர். ஆனால், அந்த நபர் தனது அறிகுறிகளை Grok AI உடன் பகிர்ந்து கொண்டபோது, ஆபத்தான எச்சரிக்கை வந்தது. 49 வயதான அந்த நோயாளிக்கு 24 மணி நேரமாக தாங்க முடியாத வலி இருந்தது. AI சில நிமிடங்களில் அவருக்கு அல்சர் அல்லது வெடிக்கத் தயாராக இருந்த அப்பெண்டிக்ஸ் பிரச்சனை இருப்பதை சுட்டிக்காட்டியது. Grok AI உடனடியாக சி.டி. ஸ்கேன் எடுக்குமாறு ஆலோசனை வழங்கியது, இது நோயாளிக்கு உயிர் காக்கும் முடிவாக அமைந்தது.
AI-இன் ஆலோசனையின்படி, அவசர மருத்துவமனைக்குத் திரும்பிய நோயாளி சி.டி. ஸ்கேன் எடுத்தபோது, அவருக்கு வீங்கிய அப்பெண்டிக்ஸ் இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து ஆறு மணி நேரத்திற்குள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சரியான நேரத்தில் AI-இன் எச்சரிக்கை வந்திருக்காவிட்டால், பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கலாம். இந்தச் சம்பவம் வெளிவந்த பிறகு, மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பாராட்டி, மருத்துவத் துறையில் AI-இன் பங்கு குறித்து புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.