ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு செமிபைனல் வாய்ப்பு பிரகாசம்

டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்ற இந்திய அணிக்கு, தற்போது ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவு மிக முக்கியமானது. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால், இந்தியா தனது அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்றாலே அரையிறுதிக்குச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் தோற்கும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படையில் இந்தியா முன்னிலை பெற வழிவகை ஏற்படும். இருப்பினும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மற்ற அணிகளின் முடிவை நம்பியிருக்காமல், அடுத்தடுத்த போட்டிகளில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.