ஜி கே வாசன் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு வேட்பாளர்கள் போட்டியிடும் சின்னத்தில் பெரும் மாற்றம்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடித்து வந்த தொகுதி பங்கீட்டு இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டன்சத்திரம், ராணிப்பேட்டை, ஈரோடு மேற்கு, கும்பகோணம் மற்றும் கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்து அதிருப்தியில் இருந்த வாசன், கூட்டணித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவை ஏற்றுக்கொண்டார்.
இந்த தொகுதி ஒதுக்கீட்டில் ஒரு முக்கிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது, அதுவே அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இந்த 5 தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிட முடியாது. மாறாக, அவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் ‘தாமரை’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டணியில் இருந்த குழப்பங்கள் தீர்க்கப்பட்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.