சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர் திருவிழா இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் நேரடி இசையில் அதிரடி

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ரசிகர் திருவிழா இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் நேரடி இசையில் அதிரடி

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 22-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட ரசிகர் திருவிழாவை நடத்துகிறது. இந்த மெகா நிகழ்ச்சியில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை கச்சேரி இடம்பெற உள்ளது. மேலும் சுரேஷ் ரெய்னா, மேத்யூ ஹைடன் போன்ற சிஎஸ்கே ஜாம்பவான்கள் தற்போதைய அணி வீரர்களுடன் இணைந்து இதுவரை கண்டிராத சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

குவஹாத்தியில் மார்ச் 30-ம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே களம் காண்கிறது. இந்த நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவிற்கான டிக்கெட் விற்பனை இன்று (15-ம் தேதி) சிஎஸ்கே மற்றும் டிஸ்ட்ரிக்ட் இணையதளங்களில் தொடங்குகிறது. கிரிக்கெட் மற்றும் இசை ரசிகர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *