செல்வத்தைக் சேர்க்கும் லட்சுமி படத்தின் சரியான இடம்!

செல்வத்தைக் சேர்க்கும் லட்சுமி படத்தின் சரியான இடம்!

வீட்டில் லட்சுமி தேவி படம் அல்லது விக்கிரகத்தை வைக்கும் போது சில வாஸ்து விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, லட்சுமி தேவி படம் அல்லது விக்கிரகத்தை வடக்கு அல்லது வடக்கிழக்கு திசையில் வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த திசையில் வைக்கும் போது செல்வம் மற்றும் வளமை நிலைத்திருக்குமென்றும் நம்பிக்கை உள்ளது.

இதேபோல், தாமரை மலரில் அமர்ந்து செல்வத்தை பொழியும் லட்சுமி தேவியின் படம் இருப்பது வீட்டில் பொருளாதார நிலையை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. இது குடும்பத்தில் செல்வ செழிப்பை பெருக்கும் என்றும் வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மறந்து கூட தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் லட்சுமி தேவி படத்தை வைக்கக் கூடாது என எச்சரிக்கப்படுகிறது. இந்த திசையில் வைப்பது எதிர்மறை சக்திகளை தூண்டும் என்பதால் வீட்டில் பொருளாதார பிரச்சினைகள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, வாஸ்து விதிகளைப் பின்பற்றி சரியான திசையில் லட்சுமி தேவி படத்தை வைப்பது முக்கியமானதாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *