சென்னையில் மகன் முன்னிலையில் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது
March 10, 2026

மதுரவாயலில் கடந்த 8-ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த 41 வயது பெண்ணிடம் வாலிபர் ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டு தப்பியோடினார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜா பத்ராவை (24) அதிரடியாக கைது செய்தனர். சீமாத்தம்மன் காலனி தனியார் நிறுவன ஊழியரான அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.