சுஷாந்த் கதி தனக்கும் வரும்! நடிகை தனுஸ்ரீயின் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டு
July 24, 2025

நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் தன்னை ஒப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உணர்ச்சிவசப்பட்ட தனுஸ்ரீ, தான் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாகவும், மனரீதியாகத் சித்திரவதை செய்யப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இதற்குப் பின்னால் பாலிவுட் மாஃபியாக்கள் இருப்பதாகவும், அவர்களால் தான் வீட்டிலும் பாதுகாப்பாக இல்லை என்றும் அவர் கூறினார். இந்தச் சூழ்நிலையில் சுஷாந்த் போன்ற ஒரு முடிவு தனக்கும் ஏற்படலாம் என்று நடிகை அச்சம் தெரிவித்தார்.