சிக்கன் மட்டன் அல்லது மீன், உங்கள் ஆரோக்கியத்திற்கு எது ஆபத்து என்று தெரியுமா

சிக்கன் மட்டன் அல்லது மீன், உங்கள் ஆரோக்கியத்திற்கு எது ஆபத்து என்று தெரியுமா

செய்தி பிரிவு : புரதச் சத்துக்காக நாம் விரும்பி உண்ணும் சிக்கன், மட்டன் அல்லது மீன் உங்கள் உடலுக்கு சில நேரங்களில் தீங்காக அமையலாம். ஜிம் செல்பவர்கள் மற்றும் டயட் இருப்பவர்கள் இவற்றை அதிகம் பரிந்துரைத்தாலும், ஒவ்வொருவரின் உடல்நிலையும் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக யூரிக் அமிலம் மற்றும் சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் சிக்கனைத் தவிர்ப்பது நல்லது, இல்லையெனில் அது உங்கள் வலியை அதிகப்படுத்தும்.

மட்டன் சுவையாக இருந்தாலும், அதில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது. இது இதய நோயாளிகள் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். அதேபோல் மீன் ஆரோக்கியமானது என்றாலும், அலர்ஜி மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே, மற்றவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று நீங்களும் சாப்பிடாமல், உங்கள் உடலுக்கு எது சேரும் என்பதை அறிந்து உண்பதே புத்திசாலித்தனம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *