சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வால் உலக நாடுகள் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வால் உலக நாடுகள் அதிர்ச்சி

ஈரான் மீதான தாக்குதல் எதிரொலியாக ஹோர்முஸ் நீரிணை வழி கப்பல் போக்குவரத்து முடங்கியதால் கடந்த 15 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 41 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி 27 அன்று 73 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 103 டாலராக அதிகரித்துள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகள் உற்பத்தியை குறைத்துள்ளதால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து முடக்கம் தொடர்ந்தால் வரும் வாரங்களில் எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே ஒரு பேரல் 120 டாலர் வரை சென்ற நிலையில் தற்போது 103 டாலராக விற்பனையாகிறது. மாற்றுப்பாதைகள் இல்லாத சூழலில் வளைகுடா நாடுகளின் இந்த உற்பத்தி தடையால் பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியை சந்திக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *