சமையல் கேஸ் சிலிண்டரில் இனி புதிய மாற்றம் இறக்குமதி குறையும் செலவு மிச்சமாகும்
March 27, 2026

புனேவில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக (NCL) விஞ்ஞானிகள், எல்பிஜி இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் ‘டைமெத்தில் ஈதர்’ (DME) எனும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்தச் செயற்கை எரிபொருளை எல்பிஜியுடன் 8% வரை கலந்து பயன்படுத்த முடியும். இதன் மூலம் இந்தியா ஆண்டுக்கு சுமார் 9500 கோடி ரூபாய் அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எரிபொருள் மிகவும் தூய்மையானது என்பதால், அடுப்பில் கரி படியாது மற்றும் புகை ஏதுமின்றி எரியும். தற்போது ஒரு நாளைக்கு 250 கிலோ உற்பத்தியை எட்டும் வகையில் பணிகள் நடந்து வருகின்றன. எல்பிஜிக்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவதற்கான காப்புரிமையை இந்திய விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். அரசின் அனுமதியுடன் இது விரைவில் வணிக ரீதியாகப் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது.