சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுவதாக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுவதாக மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்

நாடெங்கும் நிலவும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு நடுத்தர மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை கடுமையாக பாதிப்பதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். சில பகுதிகளில் மக்கள் கூடுதல் விலைக்கு சிலிண்டர் வாங்கும் சூழல் நிலவுவதாகவும், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு விநியோகத்தை சீராக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, அவையின் விதிமுறைகளை சுட்டிக்காட்டியதுடன் காங்கிரஸ் தரப்பு மக்களை தூண்டிவிடுவதாக சாடினார். தட்டுப்பாடு ஏதுமில்லை என பெட்ரோலியத் துறை அமைச்சர் கூறினாலும், கள யதார்த்தம் அதற்கு மாறாக இருப்பதாக கார்கே தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *