சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்த வதந்தியால் முன்பதிவு செய்ய மக்கள் தீவிரம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்த வதந்தியால் முன்பதிவு செய்ய மக்கள் தீவிரம்

வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் ஒரே நேரத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முயன்றதால் இணையதளங்கள் முடங்கின. கடந்த வெள்ளிக்கிழமை 88.8 லட்சமாக இருந்த முன்பதிவு எண்ணிக்கை சனிக்கிழமை சற்று குறைந்தாலும் ஆன்லைன் வழி பதிவுகள் 87 சதவீதமாக அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு உறுதியளித்த போதிலும் மக்கள் எரிவாயு அலுவலகங்களில் நேரடியாக குவிந்து வருகின்றனர்.

ஈரான் போர் சூழலால் வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதே இந்த அச்சத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்பதிவுக்கான கால அவகாசத்தை மட்டுமே அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என்றும் தட்டுப்பாடு இன்றி விநியோகம் நடைபெறுவதையும் உறுதி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *