சமந்தாவிற்காக விவாகரத்தா? ராஜின் முதல் மனைவி ஷியாமலி தே பற்றி பரபரப்பு தகவல்

இயக்குநர் ராஜ் நிடிமோரு மற்றும் நடிகை சமந்தா ரூத் பிரபு இருவரும் தனிப்பட்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இது இரண்டாவது திருமணமாகும். ஆனால், இதன் மத்தியில் ராஜின் முதல் மனைவியும் பெங்காலிப் பெண்ணுமான ஷியாமலி தே குறித்த தகவல்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளன. ராஜ் மற்றும் ஷியாமலிக்கு 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். 2022-ல் இருவரும் பிரிந்தாலும், சமந்தாவே விவாகரத்துக்குக் காரணம் என்ற செய்தி பரவி வருகிறது. ஷியாமலியின் சமீபத்திய சமூக ஊடகப் பதிவுகள் இந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளன.
யார் இந்த ஷியாமலி? இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் உளவியல் (Psychology) படித்துள்ளார். பின்னர் திரைப்படத் துறையில் கால் பதித்தார். அவர் ராக்கேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா மற்றும் விஷால் பரத்வாஜ் போன்ற இயக்குநர்களுடன் திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ‘ரங் தே பசந்தி’ மற்றும் ‘ஓம் காரா’ போன்ற படங்களில் அவரது பணி குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு பெங்காலிப் படமான ‘ஏக் நொதிர் கொல்போ’-விலும் பணியாற்றியுள்ளார். அனைத்து சடங்குகளுடன் கூடிய பெங்காலித் திருமணம் நடந்தும், ராஜ்-ஷியாமலி உறவு முறிந்துபோனது.