சக வீரரின் பேட்டை கடன் வாங்கி 18 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசி அபிஷேக் சர்மா சாதனை

சக வீரரின் பேட்டை கடன் வாங்கி 18 பந்துகளில் அதிவேக அரைசதம் விளாசி அபிஷேக் சர்மா சாதனை

தொடர் பார்ம் அவுட்டில் தவித்த இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, சக வீரர் சிவம் துபேயின் பேட்டை பயன்படுத்தி நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். லோக்கி பெர்குசன் பந்தில் சிக்ஸர் அடித்து தனது அதிரடியைத் தொடங்கிய அவர், வெறும் 18 பந்துகளில் இந்த உலகக்கோப்பையின் அதிவேக அரைசதத்தை எட்டினார். இந்த அதிரடி ஆட்டம் விமர்சகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்தது.

அபிஷேக்கின் 52 ரன்களுக்குப் பிறகு சிவம் துபேயும் கடைசி ஓவரில் 24 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியின் நம்பிக்கையைத் தகர்த்தார். ரன் வறட்சியைப் போக்க ஒரு மாற்றத்திற்காக துபேயின் பேட்டைப் பயன்படுத்தியதாக அபிஷேக் போட்டிக்குப் பின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அணியின் இக்கட்டான சூழலில் பயிற்சியாளர் மற்றும் வீரர்களின் முழு ஆதரவே தனது இந்த கம்பேக்கிற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *